இந்த வருடம் ஆலய குருக்கள் இல்லாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து பாடல்களை பாடியும் பஜனைகளைப் பாடியும் தேவிகளை வணங்கினார்கள்
நவராத்திரி பற்றிய பேச்சினை வளர்தமிழ் 2 மாணவன் செல்வன் விரோசன் ரமேஷ் அவர்கள் வழங்கியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து கல்வி அறிவின் மகத்துவம் என்ற தலைப்பில் மழலையர் நிலை மாணவ மாணவிகள் செல்வன் அக்சயன் ஐங்கரன் மற்றும் செல்வி அகானா சுதர்சன் கவிதையினை தொகுத்து வழங்கியிருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மழலையர் நிலை மாணவ மாணவிகள் செல்வன் தருண் சுதர்சன், செல்வி ஷஷ்மிகா சுகந்தன், செல்வி ஆதியா திருராஐன், செல்வி வர்ணிகா ரமேஷ், செல்வன் ஆதித்யன் அருள்வடிவேல், செல்வி சாதுரி ஜெயசேகரன், செல்வன் ஆதுரன் அருள்வடிவேல், செல்வன் சாய்ஹரிஷ் திவாகர் மற்றும் செல்வி ஹஷ்விகா தினேஷ்குமார் அவர்கள் காலை தூக்கி கண்ணில் ஒற்றிக் கட்டிக்கொள்ளும் அம்மா என்ற பாடலை பாடி மகிழ்ந்தார்கள்.
அடுத்த நிகழ்வாக மீண்டும் மழலையர் நிலை மாணவர்களின உலகப் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களை பிரதிபலிக்கும்; நிகழ்வு இடம்பெற்றது இதில் செல்வி அகஷ்னி ஐங்கரன் இராவணனனாக, செல்வி பவீனா ரமேஷ் ஒளவையாரக, செல்வி அத்வினி சஞ்ஜீவன் திருவள்ளுவராக, செல்வன் அங்கிதன் சிவகரன் விபுலானந்த அடிகளாக, செல்வி கம்சிகா ரஜீவன் பாரதியாராக மற்றும் செல்வன் ஹரிஷ் செல்வநாயகம் இளங்கோ அடிகளாக அவர்களுக்குரிய வேடம் தரித்து வந்திருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து வேப்பிலை நடனம் வளர்தமிழ் 4, 5 மாணவிகளால் வழங்கப்பட்டது. அதில் செல்வி ஐஷ்வர்யா ராஐலிங்கம், செல்வி காவியா நிமல்ராஜ், செல்வி மதுஷிகா சுகர்ணன், செல்வி மனிஷா மயூரன், செல்வி அனன்யா சுரேஷ் மற்றும் செல்வி திருத்திகா சுகர்ணன் அவர்களும் நடனமாடினார்கள்.
இறுதியாக செல்வன் ராகவன் ராம்ராஜ் அவர்களின் கல்வி என்ற தலைப்பில் பேச்சு இடம்பெற்றதுடன் தலைமை ஆசிரியர் அவர்களின் உரையுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.
அனைவருக்கும் மத்திய உணவுகள் பரிமாறப்பட்டன, பின்பு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன அத்துடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.