இலண்டன் மாநகரில் வசித்து வந்த செல்வி திக்சிகா பாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவு அனைவரையும் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளந்தளிரான இவரின் தோற்றமும், கம்பீரமும், துணிச்சலும், ஆளுமை மிகுந்த திறனும் இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட கொடைகள். இவற்றை எல்லாம் பல வழிகளில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்.
அம்மா திக்சி தமிழுக்காய் உன்னை அற்பணித்தாய். எம் இனம் வாழ இனவிடுதலைக்காய் சிறு வயதில் இருந்தே பல போராட்டங்களை முன் நின்று வெற்றிகரமாக நிகழ்த்தினாய். நீயும் ஒரு இனவிடுதலைக்காக கடைசி வரை அகிம்சை வழியில் போராடியவளே.
நீ மரணிக்கவில்லை…….
ஆயிரம் போராளிகளின் வரிசையில் நீயும் ஒருத்தியாய் எம் மனதில் திகழ்வாய். நீ அமைதியாய் உறங்கு. உன் ஆத்மா எங்களை ஆசிர்வதிக்கட்டும் உன் வழியில் நாம் எங்களின் பயணத்தைத் தொடர்கிறோம். உனது இழப்பினால் ஆறாத்துயருற்றிருக்கும் உமது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம்
டார்ட்போர்ட் தமிழ் அறிவியற்கழக
நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள்