சரஸ்வதி பூசை 2015

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா
எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள்
கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா
தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் இலட்சுமி
தேவிக்காகவும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை தரும் சரஸ்வதி
தேவிக்காகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜய தசமி
என்றழைக்கப்படுகிறது.

இறுதி நாளான விஜய தசமியில் கல்விக்கான புத்தகங்கள் அவரவர்கள் தமது
தொழிலகளின் மூலப்பொருட்களை வைத்து பூசை செய்து வழிபடுவார்கள்.
குழந்தைகளுக்கு அதாவது ஐந்து வயதை அடைந்த அடுத்த வருடம்
பள்ளிக்கு செல்லும் மழலைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்வும் இந்த விஜய
தசமியில் இடம்பெறுவது சிறப்பாக கருதப்படுகிறது. தமது கல்வியை எழுத்தில்
தொடங்கலாம் என்பதை அரிசியில் குழந்தையின் கையை பிடித்து வயதில் மூத்த
அறிவில் சிறந்த ஒரு ஆசானால் “அ, ஆ” என்ற தமிழின் உயிர் எழுத்துக்களை எழுதி
காண்பித்து அன்பாக அதை உச்சரித்தும் சொல்லுவதற்கு சொல்லி கொடுத்து
அவர்களுக்கு அரிச்சுவடி மற்றும் எழுதி பார்ப்பதற்கான பயிற்சி புத்தகம்,
பென்சில் என்பன கொடுத்து விடுவார்கள்.

எமது பாடசாலையில் இடம்பெற்ற சரஸ்வதி பூசையின் படங்கள்.