பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2024

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். இந்த வருடமும் வழமை போல பாடல்களைப் பாடியும் பஜனைகளைப் பாடியும் தேவிகளை வணங்கினார்கள்.