இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
Tamil(தமிழ் tamiḻ) is a classical language and the mother language of all the Dravidian language family. Spoken predominantly by Tamils in North-East of Sri Lanka, India, , Malaysia, and Singapore.
நோக்கம்
” புலம்பெயர் தமிழ்த் தலைமுறையினர் தமது தாய்மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பேணும் திறனுடைய மனப்பாங்கு கொண்ட சமுதாயத்தை உருவாக்குதல்”
நோக்கக்கூறு
” தூரநோக்கை எய்துவதற்காக இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டலும், வழிகாட்டலுக்கான திறன், மனப்பாங்கு கொண்ட பெற்றோர் சமூகம், ஆசிரியர், தமிழ் சமுதாயம் ஆகியோருக்கான வழிகாட்டலையும் வளத்தினையும் வழங்குவதுடன் நலிவுகளையும் இனங்கண்டு அதன் மேம்பாட்டிற்கான தேவைகளை வழங்குதல்”
The TEDC is dedicated to promoting balanced, respectful and enriched relations throughout the Tamil community to embrace their own culture and heritage as well as providing an opportunity for integration and a level playing field into the western world through education and social activities.