கடந்த 10 வருடங்களில் மாணவர்களின் செயலாற்று புள்ளி விபரங்கள்

பாடசாலை சமுதாய உறவை வலுப்படுத்தி மாணவர்களின் கற்கும் ஆற்றலையும், கற்றல் பேறுகளையும் பிள்ளைகளின் கற்றலில் பாடசாலையிலும், வீட்டிலும், குடும்பத்தினர் காட்டும் ஈடுபாடானது, அவர்களின் பாடசாலைத் தரங்கள், மற்றும் பரீட்சைப் புள்ளிகளை அதிகரிக்கச் செய்திருப்பதுடன் பாடசாலைக்கு ஒழுங்காக வருதல், சமூகதிறன்களை வளர்த்தல், பட்டப்படிப்புக்குச் செல்லும் வீதத்தை அதிகரித்தல் அத்துடன் இடை நிலைக் கல்விக்கு அப்பாலும் கல்வியைத் தொடருதல் மேலும் ..

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

சங்கிலியன் இல்லமும் எல்லாளன் இல்லமும் மோதிக் கொள்ளும் பாடசாலை மட்டத்திலான டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2019 க்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 30ஆம் திகதி ஜூன் மாதம் நடைபெறும். சிறுவர்களுக்கான போட்டிகள் 29ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை பாடசாலையிலும் (Holy Trinity Primary School), மறுநாள் 30 ஆம் திகதி ஜூன் மேலும் ..

அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2018

வணக்கம், அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2018 வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். மாணவர்கள் அனைவரும் 30 நிமிடத்திற்கு முன்னதாக மண்டபத்திற்கு வருகை தருதல் வேண்டும் மற்றும் எங்களது பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாடசாலை சீருடையில் வருதல் கட்டாயமாகும்.

பெற்றோர் சந்திப்பு

வணக்கம், வரும் வாரம் 05/05/18 அன்று பெற்றோர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 11.30 மணி தொடக்கம் 13.30 மணி வரை இச் சந்திப்பு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறும் என்று அறியத்தருகின்றோம்.

மீண்டும் ஆரம்பம்

கடந்த வாரம் காலநிலை மாற்றத்தால் பாடசாலை நடைபெறவில்லை, வழமைபோல இந்த வாரம் (10/03/2018) பாடசாலை நடைபெறும் என்பதினை அனைத்து பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம். நன்றி நிர்வாகம்

பனிப்பொழிவு

பிரித்தானியாவின் திடீர் காலநிலை மாற்றத்தால் இந்த வாரம் முழுவதும்  பனிப்பொழிவு இருக்குமென்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. டார்ட்போர்ட் பகுதியிலும் கூடுதலான பனிப்பொழிவு இருப்பதால் வரும் சனிக்கிழமை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகின்றது.

தைத்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் கதிரவனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

மாவீரர் வார தொடக்க நிகழ்வு

டார்ட் போர்ட் தமிழ் அறிவியற் கழகதில் எமது தாய் நாட்டிற்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூரல், வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி மாவீரர் வார தொடக்க நிகழ்வாக நிகழ இருக்கின்றது.

இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2016க்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் 25 மற்றும் 26ஆம் திகதி ஜூன் மாதம் நடைபெறும். சிறுவர்களுக்கான போட்டிகள் 25ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை பாடசாலையிலும் (Holy Trinity Primary School), மறுநாள் 26 ஆம் திகதி ஜூன் மாதம் ‪#‎Dartford‬ ‪#‎Harriers‬ Athletic Club இல் காலை 10 மேலும் ..

பெற்றோர்கள் சந்திப்பு 13/02/2015 @ 11.30am

வரும் வாரம் 13/02/2015 அன்று பெற்றோர்கள் சந்திப்பு இடம்பெற இருப்பதால் அணைத்து பெற்றோர்களையும் காலை 11.30 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ் சந்திப்பில் இவ் வருடம் இடம்பெற இருக்கும் விளையாட்டுப் போட்டி சம்மந்தமாகவும், வைகாசி மற்றும் ஆணி மதங்களில் இடம்பெற இருக்கும் வருட இறுதி பரீட்சை சார்ந்த கலந்துரையாடல் இடம்பெற இருக்கின்றது. பாடசாலையில் மேலும் ..

அரையாண்டுத் தேர்வு 2016

அரையாண்டுத் தேர்வு 2016 ஆண்டுதோறும் நடுப்பகுதியில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையிலான அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத்தேர்வு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடத்தப்படுகின்றது. பொதுத் தேர்வின் மாதிரி வினாத்தாளாகவே இத்தேர்வு அமைந்திருக்கும்.