நட்புரீதியான உதைபந்தாட்டம்

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் 2016க்கான போட்டி வழமைபோல இந்த வருடமும் ஜூன் மாதம் 26ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. பாடசாலை மாணவர்களின் விருப்பத்துக்கிணங்க இரண்டு இல்லங்களுக்கான உதைபந்தாட்ட குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு நட்புரீதியான போட்டி சென்ற வாரம் இடம்பெற்றது. போட்டியின் சிறிய காணொளித் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் சந்திப்பு 13/02/2015 @ 11.30am

இன்று 13/02/2015 இடம்பெற்ற பெற்றோர் சந்திப்புக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள். ஏப்ரல் மாதம் இடம்பெற இருக்கும் கலை வகுப்பு பரிட்சை அதற்கு அடுத்ததாக இடம்பெறும் தமிழ்மொழி பரிட்சைகள் தொடர்பான விளக்கங்கள் இன்று கொடுக்கப்பட்டது. பாடசாலையில் இடம்பெற இருக்கும் மெய்வல்லுனர் போட்டி 2016 க்கான திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமாக & அரையாண்டுத் தேர்வு

ஆரோக்கியமாக & அரையாண்டுத் தேர்வு இன்று எங்களது பாடசாலையில் இடம்பெற்ற ஆரோக்கியமாக நிகழ்வில் 20க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் மருத்துவர்களை சந்தித்து உதவிகள் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் Kent Police சுய பாதுகாப்புக்கள், வீட்டு பாதுகாப்பு, பொருட்கள் மற்றும் அனைத்துவிதமான விளக்கங்களை மாணவர்களுக்கும் அங்கு நின்றோர்களுக்கும் வழங்கினார்கள்.

அரையாண்டுத் தேர்வு 2016

அரையாண்டுத் தேர்வு 2016 ஆண்டுதோறும் நடுப்பகுதியில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையிலான அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத்தேர்வு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடத்தப்படுகின்றது. பொதுத் தேர்வின் மாதிரி வினாத்தாளாகவே இத்தேர்வு அமைந்திருக்கும்.

மாவீரர் நாள் 2015

டார்ட் போர்ட் தமிழ் அறிவியற் கழகதில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 21.11.2015 அன்று காலை 11.15மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வன் கிரிஷாந்த் நகுலதாஸ் ஏற்றிவைத்தார். அதன்பின்பு   அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ..

சரஸ்வதி பூசை 2015

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் இலட்சுமி தேவிக்காகவும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை தரும் சரஸ்வதி தேவிக்காகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி மேலும் ..

தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2015

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2015 தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி மாலை… Posted by Dartford Tamil Knowledge Centre on Sunday, 21 June 2015

மெய்வல்லுனர் போட்டி 2015 நாள் 1 – 13/06

பாடசாலை மைதானத்தை முழுநேரமாக பாவிக்க முடியாதபடியால் இரண்டு நாட்களா நடக்கும் மெய்வல்லுனர் போட்டியின் முதல் நாள் புகைப்படங… Posted by Dartford Tamil Knowledge Centre on Saturday, 13 June 2015

அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும்.

6ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை எமது பாடசாலையில் வழமைபோல அனைத்துலகப் பொதுத் தேர்வு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது. வருடா வருடம் பரீட்சை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மற்றும் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை தவிர்க்க எம் வேண்டுதலுக்கமைய எமது பாடசாலையை ஒரு பரீட்சை மையமாக அறிவித்தார்கள். அதற்கமைய பிள்ளைகள் இடங்கள் செல்லாமல் எமது மேலும் ..