அரையாண்டு பொதுத் தேர்வு 2022

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வு 2022 வழமை போல பாடசாலை மண்டபத்தில் வகுப்பு ரீதியாக நடைபெறும். மாணவர்கள் தங்களை அணியம் செய்து கொள்வதற்காக ஏற்கனவே அனைத்து கடந்த கால தேர்வு வினாத்தாள்களும் பாடசாலை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இதனை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பிரதி எடுத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அரையாண்டுத் மேலும் ..

அரையாண்டு பொதுத் தேர்வு 2021

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அனைத்துலக அரையாண்டு பொதுத் தேர்வு 2021 வழமை போல பாடசாலை மண்டபத்தில் நடைபெறும். பிரித்தானிய அரச மற்றும் பாடசாலையின் கொரோனா விதிகளை அனைவரும் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வு 2021 வழமை போல பாடசாலை மண்டபத்தில் வகுப்பு ரீதியாக நடைபெறும். மாணவர்கள் மேலும் ..

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை. கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன? புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி மேலும் ..

கற்கை நெறி

புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் சிறார்களுக்காக தமிழ்ப் பாடசாலைகளில் நடைபெறும் அனைத்துலக மற்றும் அரையாண்டு வினாத்தாள்களை மாணவர்களின் நலன் கருதி எங்கள் தளத்தில் இணைத்துள்ளோம். வளர்தமிழ் 1-12 வகுப்பிற்கான வினாத்தாள்கள் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் தயாரிக்கப்பட்டு அவர்களாலேயே தேர்வும் நடாத்தப்பட்டு மாணவர்களின் மதிப்பீடுகள் கொடுக்கப்படுகின்றன. மழலையர் நிலை மற்றும் பாலர்நிலைக்கான வினாத்தாள்கள் எங்கள் பாடசாலை மேலும் ..

தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

 < அனைத்துலகத் தாய்மொழித் தினம் பெப்ருவரி 21> ஒருவரின் ‘தாய்மொழி’ அல்லது ‘நாவின் தாய்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை அவர் தனது மிக இளமைக்காலத்தில் பேசத் தொடங்கிய மொழி என்று இரத்தினச் சுருக்கமாக விளக்குகிறது. தாய்மொழி என்பது ஒரு மொழியாகவே தொன்மை முதல் கருதப்பட்டு வந்தாலும் பன்மொழிகள் பேசும் பல்கலாச்சார குடும்பப் பின்னணியில் வளரும் மேலும் ..

‘தேசத்தின் இளஞ்சுடர்’ – செல்வி திக்சிகா

‘தேசத்தின் இளஞ்சுடர்’ இலண்டன் மாநகரில் வசித்து வந்த செல்வி திக்சிகா பாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவு அனைவரையும் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இளந்தளிரான இவரின் தோற்றமும், கம்பீரமும், துணிச்சலும், ஆளுமை மிகுந்த திறனும் இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட கொடைகள். இவற்றை எல்லாம் பல வழிகளில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்.

பெற்றோர் சந்திப்பு

வணக்கம், வரும் வாரம் 23/03/19 அன்று பெற்றோர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 11.30 மணி தொடக்கம் 13.30 மணி வரை இச் சந்திப்பு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறும் என்று அறியத்தருகின்றோம்.

தமிழர் பாரம்பரிய இசைகருவிகள் – யாழ்

“யாழ்” என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி மேலும் ..

மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது வீரவணக்க நாள் இன்றாகும்

மாவீரன் பண்டாரவன்னியனின் வீரவணக்க நாள்…! [31-10-2018] வன்னியை இறுதியாக ஆண்ட மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது வீரவணக்க நாள் இன்றாகும் தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய பண்டார வன்னியன் ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.

ஆசிரியர் பயிற்சி செயலமர்வு 2018

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரட்ணம் அவர்களுடன் நமது தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி செயலமர்வு 2018 இல் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பெற்றோர் சந்திப்பு

வணக்கம், வரும் வாரம் 05/05/18 அன்று பெற்றோர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 11.30 மணி தொடக்கம் 13.30 மணி வரை இச் சந்திப்பு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறும் என்று அறியத்தருகின்றோம்.