100 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சாவகச்சேரியில் இயங்கும் கல்விக்கூடத்தில் பயிலும் 100 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி எங்களது பள்ளியால் இன்று வழங்கி வைக்கப்படடன. அதேநேரம் அவர்களுக்கான காலை நேர சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.

தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் பரிசளிப்பு விழா – 2023

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளையால் நடாத்தப்பட்ட 8 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா 19-02-2023, ஞாயிற்றுக்கிழமையன்று கரோ லெசர் சென்ரர் பைரன் மண்டபத்தில், வெகு சிறப்பாக நடைபெற்றது. விழா காலை 9:30 மணிக்கு அகவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. இவ்விழாவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட கிட்டத்தட்ட 10,000 இற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். தமிழர் கல்வி மேலும் ..

தைத்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும் 2023

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

தமிழீழத் தேசிய மாவீரர் வார தொடக்க நிகழ்வு 2022

தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள். பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள். தமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்! மேலும் ..

பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2022

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். இந்த வருடம் ஆலய குருக்கள் இல்லாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து பாடல்களை பாடியும் பஜனைகளைப் பாடியும் தேவிகளை வணங்கினார்கள் நவராத்திரி பற்றிய பேச்சினை வளர்தமிழ் 2 மாணவன் மேலும் ..

கடந்த 10 வருடங்களில் மாணவர்களின் செயலாற்று புள்ளி விபரங்கள்

பாடசாலை சமுதாய உறவை வலுப்படுத்தி மாணவர்களின் கற்கும் ஆற்றலையும், கற்றல் பேறுகளையும் பிள்ளைகளின் கற்றலில் பாடசாலையிலும், வீட்டிலும், குடும்பத்தினர் காட்டும் ஈடுபாடானது, அவர்களின் பாடசாலைத் தரங்கள், மற்றும் பரீட்சைப் புள்ளிகளை அதிகரிக்கச் செய்திருப்பதுடன் பாடசாலைக்கு ஒழுங்காக வருதல், சமூகதிறன்களை வளர்த்தல், பட்டப்படிப்புக்குச் செல்லும் வீதத்தை அதிகரித்தல் அத்துடன் இடை நிலைக் கல்விக்கு அப்பாலும் கல்வியைத் தொடருதல் மேலும் ..

தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் பரிசளிப்பு விழா – 2022

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளையால் நடாத்தப்பட்ட 8 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா 27-03-2022, ஞாயிற்றுக்கிழமையன்று கரோ லெசர் சென்ரர் பைரன் மண்டபத்தில், வெகு சிறப்பாக நடைபெற்றது. விழா காலை 9:30 மணிக்கு அகவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. இவ்விழாவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட கிட்டத்தட்ட 10,000இற்;கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். தமிழர் கல்வி மேம்பாட்டு மேலும் ..

மீண்டும் தமிழ்ப் பாடசாலைக்குச் செல்வோம்

#கலை வகுப்புகள் மற்றும் #மழலையர் நிலை வகுப்புகள் மாத்திரம் இப்போதைக்கு நேரடியாக ஆரம்பிக்கும். அடுத்து வரும் மாதத்தில் இருந்து மற்ற வகுப்புகளும் பாடசாலையில் ஆரம்பிக்கும் முற்கூட்டிய அறிவித்தலின் பின்பு. #tamil

அரையாண்டு பொதுத் தேர்வு 2022

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வு 2022 வழமை போல பாடசாலை மண்டபத்தில் வகுப்பு ரீதியாக நடைபெறும். மாணவர்கள் தங்களை அணியம் செய்து கொள்வதற்காக ஏற்கனவே அனைத்து கடந்த கால தேர்வு வினாத்தாள்களும் பாடசாலை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இதனை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பிரதி எடுத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அரையாண்டுத் மேலும் ..

அரையாண்டு பொதுத் தேர்வு 2021

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அனைத்துலக அரையாண்டு பொதுத் தேர்வு 2021 வழமை போல பாடசாலை மண்டபத்தில் நடைபெறும். பிரித்தானிய அரச மற்றும் பாடசாலையின் கொரோனா விதிகளை அனைவரும் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வு 2021 வழமை போல பாடசாலை மண்டபத்தில் வகுப்பு ரீதியாக நடைபெறும். மாணவர்கள் மேலும் ..