தமிழின விடிவுக்காய் மரணித்தவர்களை டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் நினைவுகூரல்

தமிழின விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள். பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள். தமது மக்களுக்காய் கால்களை கரங்கைளை இழந்து நின்றவர்கள்! முதல் மேலும் ..

வருடாந்த விளையாட்டு போட்டி 2024

எங்கள் 8வது ஆண்டு விளையாட்டு போட்டி 2024 ஜூன் 29 அன்று, Erith இல் அமைந்துள்ள மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடனும், அணி நடையுடனும் ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சங்கிலியன் எல்லாளன் மற்றும் பண்டாரவன்னியன் என மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் மேலும் ..

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன் இல்லமும் மோதிக்கொண்டன.

பாரம்பரிய தமிழ் கலைகளை வெளிக்கொண்டுவந்த டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக ஆண்டு நிறைவு விழா.

கடந்த சனிக்கிழமை டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்குபற்றினார்கள். லண்டன் மற்றும் கென்ற் எல்லைப்பகுதியில் கடந்த ஏழு வருடங்களாக தமிழ்ப் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவித்து வரும் தமிழ் அறிவியற் கழகமானது தனது ஆண்டு நிறைவினையொட்டி கலைவிழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் . மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் முதலில் வீரமறவர்களுக்கு மேலும் ..

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 19.11.2015 அன்று காலை 11.00 மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வி விபுஷா சிவகுமார் ஏற்றிவைத்தார். அதன்பின்பு அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ..