No10 பொங்கல்
தென்கிழக்கு பிராந்திய தமிழ் மக்கள் சார்பாகவும் எங்கள் பள்ளி சார்பாகவும் பிரித்தானியப் பிரதமர் வீட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் எங்களது பள்ளி நிர்வாகி கலந்து கொண்டார்.
தென்கிழக்கு பிராந்திய தமிழ் மக்கள் சார்பாகவும் எங்கள் பள்ளி சார்பாகவும் பிரித்தானியப் பிரதமர் வீட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் எங்களது பள்ளி நிர்வாகி கலந்து கொண்டார்.
இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு மேலும் ..
இன்றைய தினம் கென்ட் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். காவல்துறையில் செய்யப்படும் பணிகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியான பக்கம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அவற்றின் உபயோகத்தையும் விளக்கினார்கள் பின்பு கொண்டு வந்த பொருட்களையும் பார்வையிட அனுமதித்தனர். காவல்துறையினருடன் மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கழித்தனர். மாணவர்களுக்கு காவல்துறை மேலும் ..
சாவகச்சேரியில் இயங்கும் கல்விக்கூடத்தில் பயிலும் 75 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி எங்களது பள்ளியால் இன்று வழங்கி வைக்கப்படடன.
கணவர் பிரிந்து சென்ற நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் பெண், கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு மூன்று பிள்ளைகளையும் வறுமைக்கு மத்தியில் வளர்த்து வருகின்றார். பாடசாலை சென்று வரக்கூட வீட்டில் துவிச்சக்கர வண்டியின்றி உள்ளது பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்து சென்றுவர ஒரு துவிச்சக்கர வண்டி ஒன்றையும் சுயதொழில் செய்ய மேலும் ..
சாவகச்சேரியில் இயங்கும் கல்விக்கூடத்தில் பயிலும் 100 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி எங்களது பள்ளியால் இன்று வழங்கி வைக்கப்படடன. அதேநேரம் அவர்களுக்கான காலை நேர சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.
உலகமெங்கும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிப்படை தேவைகள் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள். மக்கள் வீடுகளில் முடங்கியபடி வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. பலர் தினமும் அன்றாட வேலைக்கு செல்லும் பாமர மக்கள் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள்.
வணக்கம், எங்களது பாடசாலை மூலமாக முடிந்தளவு சிறிய சிறிய உதவிகளை தாயக மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்றோம். அதில் அடுத்தபடியாக முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் இந்த சிறுமி யாழ். பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்க்கான முழு சிலவையும் பொறுப்பேற்று அதன் முதற்கட்டமாக கற்றல் தேவைக்கான உபகரணங்கள் வேண்டுவதற்காக சிறு தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளுது.
தாயகத்தில் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து குடும்பங்களுக்கு எங்களது பாடசாலை சார்பாக சிறிய உதவித் தொகை இன்று வழங்கப்பட்டது.