பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2019

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். ஆலய குருக்களின் பூசைகள் நிறைவுக்கு வந்தபின்பு மாணவர்களுக்கான பிரசாதங்கள் ஆசிரியர்களால் பரிமாறப்பட்டன.

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன் இல்லமும் மோதிக்கொண்டன.

கிளித்தட்டு 2019

நேற்றைய தினம் இடம்பெற்ற கிளித்தட்டு போட்டியில் சங்கிலியன் (மஞ்சள்) இல்லம் வெற்றி பெற்றது. போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். #tamil #kilithattu #dartford #kent #tamilschool

தைத்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும்

தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப் பெரும் விழாவான இந்தப் பொங்கல் விழா சமயம் கடந்தது. பிற இந்து சமய விழாக்கள் போல நட்சத்திரத்தின் அடிப்படையிலோ, பஞ்சாங்க அடிப்படையிலோ, இஸ்லாமியப் பண்டிகைகள் போல பிறை பார்த்தோ வருவதல்ல. தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னனியில் எந்தப் புராணக் கதையும் இல்லை. ஆடி மேலும் ..

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகூரல் 2018

தமிழீழ விடுதலைக்காக முதற் களப்பலியான லெப்.சங்கரின் நினைவு நாளையே தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தாயின் மடியில் புதைக்கப்பட்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாளாகக் தமிழர் வாழும் தேசம் எங்கும் நினைவு கூரப்படுகிறது.

மாவீரர் நினைவு சுமந்த கற்கை நெறிகள்

மாவீரர் வாரத்தை நினைவு கூறும் விதமாக எமது தேசிய அடையாளங்களை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும் விதமாக மழலையர் நிலை பாலர்நிலை வகுப்பு மாணவர்கள் எங்களது தேசிய அடையாளங்களை வரைந்தும் அவற்றிற்கு வர்ணங்கள் தீட்டியும் தங்களது கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டார்கள்.

பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2018

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். ஆலய குருக்களின் பூசைகள் நிறைவு பெற்றவுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படடன, சென்ற கல்வியாண்டில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்படடன. சொல்வளம், ஊறுப்பெழுத்து, தமிழ் மேலும் ..

ஆண்டிறுதி புகைப்படத் தொகுப்பு

பாடசாலை இறுதி நாளான நேற்று பாடசாலைக்கு வருகை தந்த அனைத்து மாணவர்களையும் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பு இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்டில் புதிய வகுப்புகளிற்கு செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2018

வணக்கம், அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2018 வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். மாணவர்கள் அனைவரும் 30 நிமிடத்திற்கு முன்னதாக மண்டபத்திற்கு வருகை தருதல் வேண்டும் மற்றும் எங்களது பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாடசாலை சீருடையில் வருதல் கட்டாயமாகும்.