Author: admin
எல்லாளன் மற்றும் சங்கிலியன் இல்லங்களின் மாணவர்கள் பங்குபற்றிய வினோத உடைப் போட்டி
எங்களது பாடசாலையில் எல்லாளன் மற்றும் சங்கிலியன் இல்லங்களின் மாணவர்கள் பங்குபற்றிய வினோத உடைப் போட்டி. நான்கு குழுக்கள் நான்கு வித்தியாசமான தலைப்புக்கள். குழு 1: தமிழின் விழுதுகளும் மருகி போகும் பாரம்பரிய கலையும் குழு 2: தமிழ் உரிமைக்காக போராடியவர்களின் இன்றைய நிலைப்பாடும் அவர்களின் வாழ்வாதரமும் (வாழ்வா? சாவா?) குழு 3: உழவுத் தொழிலும் அதன் மேலும் ..
அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வு 2016
4ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை எமது பாடசாலையில் வழமைபோல அனைத்துலகப் பொதுத் தேர்வு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது. எங்களது பாடசாலையுடன் சேர்த்து மேலும் 5 பாடசாலை மாணவர்கள் இங்கு தேர்வெழுதினார்கள். பாடசாலை மாணவர்கள் கறுப்பு வெள்ளை உடையணிந்து வந்து தேர்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
நட்புரீதியான உதைபந்தாட்டம்
வருடாந்த இல்ல மெய்வல்லுனர் 2016க்கான போட்டி வழமைபோல இந்த வருடமும் ஜூன் மாதம் 26ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. பாடசாலை மாணவர்களின் விருப்பத்துக்கிணங்க இரண்டு இல்லங்களுக்கான உதைபந்தாட்ட குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு நட்புரீதியான போட்டி சென்ற வாரம் இடம்பெற்றது. போட்டியின் சிறிய காணொளித் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016
டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2016க்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் 25 மற்றும் 26ஆம் திகதி ஜூன் மாதம் நடைபெறும். சிறுவர்களுக்கான போட்டிகள் 25ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை பாடசாலையிலும் (Holy Trinity Primary School), மறுநாள் 26 ஆம் திகதி ஜூன் மாதம் #Dartford #Harriers Athletic Club இல் காலை 10 மேலும் ..
பெற்றோர்கள் சந்திப்பு 13/02/2015 @ 11.30am
இன்று 13/02/2015 இடம்பெற்ற பெற்றோர் சந்திப்புக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள். ஏப்ரல் மாதம் இடம்பெற இருக்கும் கலை வகுப்பு பரிட்சை அதற்கு அடுத்ததாக இடம்பெறும் தமிழ்மொழி பரிட்சைகள் தொடர்பான விளக்கங்கள் இன்று கொடுக்கப்பட்டது. பாடசாலையில் இடம்பெற இருக்கும் மெய்வல்லுனர் போட்டி 2016 க்கான திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் சந்திப்பு 13/02/2015 @ 11.30am
வரும் வாரம் 13/02/2015 அன்று பெற்றோர்கள் சந்திப்பு இடம்பெற இருப்பதால் அணைத்து பெற்றோர்களையும் காலை 11.30 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ் சந்திப்பில் இவ் வருடம் இடம்பெற இருக்கும் விளையாட்டுப் போட்டி சம்மந்தமாகவும், வைகாசி மற்றும் ஆணி மதங்களில் இடம்பெற இருக்கும் வருட இறுதி பரீட்சை சார்ந்த கலந்துரையாடல் இடம்பெற இருக்கின்றது. பாடசாலையில் மேலும் ..
ஆரோக்கியமாக & அரையாண்டுத் தேர்வு
ஆரோக்கியமாக & அரையாண்டுத் தேர்வு இன்று எங்களது பாடசாலையில் இடம்பெற்ற ஆரோக்கியமாக நிகழ்வில் 20க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் மருத்துவர்களை சந்தித்து உதவிகள் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் Kent Police சுய பாதுகாப்புக்கள், வீட்டு பாதுகாப்பு, பொருட்கள் மற்றும் அனைத்துவிதமான விளக்கங்களை மாணவர்களுக்கும் அங்கு நின்றோர்களுக்கும் வழங்கினார்கள்.
அரையாண்டுத் தேர்வு 2016
அரையாண்டுத் தேர்வு 2016 ஆண்டுதோறும் நடுப்பகுதியில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையிலான அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத்தேர்வு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடத்தப்படுகின்றது. பொதுத் தேர்வின் மாதிரி வினாத்தாளாகவே இத்தேர்வு அமைந்திருக்கும்.