தமிழ்ப் புத்தாண்டு – சில புரிதல்கள்

ஏப்ரல் 14ம் திகதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் கொண்டாடினார்கள். அன்றைய தினம் இந்து ஆலயங்களில் கடவுள்களைச் சமஸ்கிருத மொழியில் வழிபட்டு மகிழ்ந்தார்கள். புது வருடம் ‘பிறந்துள்ளது’ என்று, மனமகிழந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டாடினார்கள். சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா? பல்லாயிரம் ஆண்டுப் பண்பாட்டு மேலும் ..

அரையாண்டுத் தேர்வு 2017

மழலையர் நிலை தொடக்கம் வளர்தமிழ் 7 வரையான அரையாண்டுத் தேர்வு இன்று எங்களது பாடசாலையில் இடம்பெற்றது. மழலையர் நிலை மற்றும் பாலர் நிலைக்கு அவர்களுக்கான ஆசிரியர்களால் வடிவமைக்கப்படட வினாத்தாள்கள் வழங்கப்படடன.

தைத்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும்

தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப் பெரும் விழாவான இந்தப் பொங்கல் விழா சமயம் கடந்தது. பிற இந்து சமய விழாக்கள் போல நட்சத்திரத்தின் அடிப்படையிலோ, பஞ்சாங்க அடிப்படையிலோ, இஸ்லாமியப் பண்டிகைகள் போல பிறை பார்த்தோ வருவதல்ல. தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னனியில் எந்தப் புராணக் கதையும் இல்லை. ஆடி மேலும் ..

தைத்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் கதிரவனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 19.11.2015 அன்று காலை 11.00 மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வி விபுஷா சிவகுமார் ஏற்றிவைத்தார். அதன்பின்பு அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ..

மாவீரர் வார தொடக்க நிகழ்வு

டார்ட் போர்ட் தமிழ் அறிவியற் கழகதில் எமது தாய் நாட்டிற்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூரல், வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி மாவீரர் வார தொடக்க நிகழ்வாக நிகழ இருக்கின்றது.

கலைமகள் விழா

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். ஆலய குருக்களின் பூசைகள் நிறைவு பெற்றவுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படடன, சென்ற கல்வியாண்டில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்படடன. சொல்வளம், ஊறுப்பெழுத்து, தமிழ் மேலும் ..

எல்லாளன் மற்றும் சங்கிலியன் இல்லங்களின் மாணவர்கள் பங்குபற்றிய வினோத உடைப் போட்டி

எங்களது பாடசாலையில் எல்லாளன் மற்றும் சங்கிலியன் இல்லங்களின் மாணவர்கள் பங்குபற்றிய வினோத உடைப் போட்டி. நான்கு குழுக்கள் நான்கு வித்தியாசமான தலைப்புக்கள். குழு 1: தமிழின் விழுதுகளும் மருகி போகும் பாரம்பரிய கலையும் குழு 2: தமிழ் உரிமைக்காக போராடியவர்களின் இன்றைய நிலைப்பாடும் அவர்களின் வாழ்வாதரமும் (வாழ்வா? சாவா?) குழு 3: உழவுத் தொழிலும் அதன் மேலும் ..