பெற்றோர் சந்திப்பு

வணக்கம், வரும் வாரம் 05/05/18 அன்று பெற்றோர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 11.30 மணி தொடக்கம் 13.30 மணி வரை இச் சந்திப்பு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறும் என்று அறியத்தருகின்றோம்.

மீண்டும் ஆரம்பம்

கடந்த வாரம் காலநிலை மாற்றத்தால் பாடசாலை நடைபெறவில்லை, வழமைபோல இந்த வாரம் (10/03/2018) பாடசாலை நடைபெறும் என்பதினை அனைத்து பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம். நன்றி நிர்வாகம்

பனிப்பொழிவு

பிரித்தானியாவின் திடீர் காலநிலை மாற்றத்தால் இந்த வாரம் முழுவதும்  பனிப்பொழிவு இருக்குமென்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. டார்ட்போர்ட் பகுதியிலும் கூடுதலான பனிப்பொழிவு இருப்பதால் வரும் சனிக்கிழமை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகின்றது.

அரையாண்டு பரீட்சை 2018

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் அரையாண்டு தமிழ்ப் பரீட்சை இன்று எங்களது பாடசாலையில் இடம்பெற்ற வேளை.

தாயக நலன் சார்ந்த உதவி

தாயகத்தில் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து குடும்பங்களுக்கு எங்களது பாடசாலை சார்பாக சிறிய உதவித் தொகை இன்று வழங்கப்பட்டது.

மாவீரர் நாள் நினைவுகூரல் 2017

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது இன் உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 02.12.2017 அன்று காலை 10.30 மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

பாரம்பரிய தமிழ் கலைகளை வெளிக்கொண்டுவந்த டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக ஆண்டு நிறைவு விழா.

கடந்த சனிக்கிழமை டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்குபற்றினார்கள். லண்டன் மற்றும் கென்ற் எல்லைப்பகுதியில் கடந்த ஏழு வருடங்களாக தமிழ்ப் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவித்து வரும் தமிழ் அறிவியற் கழகமானது தனது ஆண்டு நிறைவினையொட்டி கலைவிழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் . மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் முதலில் வீரமறவர்களுக்கு மேலும் ..

தமிழ்ப் புத்தாண்டு – சில புரிதல்கள்

ஏப்ரல் 14ம் திகதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் கொண்டாடினார்கள். அன்றைய தினம் இந்து ஆலயங்களில் கடவுள்களைச் சமஸ்கிருத மொழியில் வழிபட்டு மகிழ்ந்தார்கள். புது வருடம் ‘பிறந்துள்ளது’ என்று, மனமகிழந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டாடினார்கள். சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா? பல்லாயிரம் ஆண்டுப் பண்பாட்டு மேலும் ..