கிளித்தட்டு 2019

நேற்றைய தினம் இடம்பெற்ற கிளித்தட்டு போட்டியில் சங்கிலியன் (மஞ்சள்) இல்லம் வெற்றி பெற்றது. போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். #tamil #kilithattu #dartford #kent #tamilschool

பெற்றோர் சந்திப்பு

வணக்கம், வரும் வாரம் 23/03/19 அன்று பெற்றோர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 11.30 மணி தொடக்கம் 13.30 மணி வரை இச் சந்திப்பு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறும் என்று அறியத்தருகின்றோம்.

தமிழர் பாரம்பரிய இசைகருவிகள் – யாழ்

“யாழ்” என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி மேலும் ..

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

சங்கிலியன் இல்லமும் எல்லாளன் இல்லமும் மோதிக் கொள்ளும் பாடசாலை மட்டத்திலான டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2019 க்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 30ஆம் திகதி ஜூன் மாதம் நடைபெறும். சிறுவர்களுக்கான போட்டிகள் 29ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை பாடசாலையிலும் (Holy Trinity Primary School), மறுநாள் 30 ஆம் திகதி ஜூன் மேலும் ..

தைத்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும்

தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப் பெரும் விழாவான இந்தப் பொங்கல் விழா சமயம் கடந்தது. பிற இந்து சமய விழாக்கள் போல நட்சத்திரத்தின் அடிப்படையிலோ, பஞ்சாங்க அடிப்படையிலோ, இஸ்லாமியப் பண்டிகைகள் போல பிறை பார்த்தோ வருவதல்ல. தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னனியில் எந்தப் புராணக் கதையும் இல்லை. ஆடி மேலும் ..

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகூரல் 2018

தமிழீழ விடுதலைக்காக முதற் களப்பலியான லெப்.சங்கரின் நினைவு நாளையே தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தாயின் மடியில் புதைக்கப்பட்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாளாகக் தமிழர் வாழும் தேசம் எங்கும் நினைவு கூரப்படுகிறது.

மாவீரர் நினைவு சுமந்த கற்கை நெறிகள்

மாவீரர் வாரத்தை நினைவு கூறும் விதமாக எமது தேசிய அடையாளங்களை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும் விதமாக மழலையர் நிலை பாலர்நிலை வகுப்பு மாணவர்கள் எங்களது தேசிய அடையாளங்களை வரைந்தும் அவற்றிற்கு வர்ணங்கள் தீட்டியும் தங்களது கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டார்கள்.

மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது வீரவணக்க நாள் இன்றாகும்

மாவீரன் பண்டாரவன்னியனின் வீரவணக்க நாள்…! [31-10-2018] வன்னியை இறுதியாக ஆண்ட மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது வீரவணக்க நாள் இன்றாகும் தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய பண்டார வன்னியன் ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.

ஆசிரியர் பயிற்சி செயலமர்வு 2018

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரட்ணம் அவர்களுடன் நமது தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி செயலமர்வு 2018 இல் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.