சரஸ்வதி பூசை 2014

இன்று பாடசாலையில் சரஸ்வதி பூசை இடம்பெறும், ஏடு தொடக்க விரும்புபவர்கள் மற்றும் காலில் சலங்கை கட்டவிரும்புபவர்கள் 11.30am க்கு பின்பு வந்து செய்து கொள்ளலாம்

பெற்றோர்கள் சந்திப்பு

இன்று தமிழ்ப் பாடசாலையில் இடம்பெற்ற பெற்றோர்கள் சந்திப்பு. தமிழ் மொழியின் பாதுகாப்பு மற்றும் பாடசாலையில் இடம்பெற இருக்கும் கலைவிழா 2014 பற்றிய கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.  

தோட்டுக்கடை ஓரத்திலே ….

தமிழ் இளையோர் அமைப்பு நடத்தும் “கற்க கசடற” திருக்குறள் போட்டியின் இறுதிச் சுற்றில் எமது மாணவர்கள் தோட்டுக்கடை ஓரத்திலே என்ற கிராமிய பாடலுக்கு நடனமாடி பாராட்டுக்களை பெற்ற சமயம்.

காலநிலை சீரின்மையால் 19ஆம் திகதி பாடசாலை இடம்பெறாது

சீரற்ற காலநிலை காரணமாக 19.01.2013 தமிழ் பாடசாலை இடம்பெறாது என்பதினை அறியத்தருகிறோம். விடுபட்ட வகுப்புகள்  எதிர்வரும் விடுமுறை தினத்தில் இடம்பெறும். மேலதிக விபரங்கள் உங்கள் வகுப்பு ஆசரியர்கள் மூலம் அறியத்தரப்படும் .

பாடசாலை தவணை இறுதி நாள் 2012

பாடசாலை 21 ஆம் திகதி ஆடி (JULY) மாதம் முடிவடையும், அதன் பிற்பாடு மீண்டும் புரட்டாதி (SEPT) மாதம் வழமை போல தொடங்கும். பாடசாலையில் உடற்பயிற்சி  தினமும் காலை ஒன்பது மணி முதல் நடைபெறும். உடற்பயிற்சியில் பங்குகொள்ள தவறும் மாணவர்கள் நிர்வாகத்தினரை சந்திக்காமல் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாது என்பதனை கவனத்தில் எடுத்து கொள்ளவும்.  

2 ஆம் தவணை ஆரம்பம் – 2012

தமிழ் அறிவியற்  கழகம் Sat, 08 Jan 2012 at 09.30am மீண்டும் ஆரம்பமாகும். புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்கத்தில் இடம்பெறும். மாணவர்களின் கவனத்திற்கு வகுப்புகளின் புதிய நேரங்கள் 2 ஆம் தவணையில் இருந்து நடைமுறைக்கு வரும், மேலதிக  விபரங்களுக்கு நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்