முதலில் பிரித்தானியக் கொடியினை பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் செல்வன் ஆதித் சுரேஷ் ஏற்றிவைக்க செல்வன் கஜன் சிவரூபன் அவர்கள் எடுத்துக் கொடுத்தார். அடுத்ததாக தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் செல்வன் சகீரன் சசிகரன் அவர்கள் ஏற்றிவைக்க செல்வன் கிருஷாந்த் கிருஷ்ணவரன் அவர்கள் எடுத்துக் கொடுத்தார்.
மாவீரர் நினைவு கூரலில் ஈகைச்சுடரினை மண்மீட்புப் போரினில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை பிறப்பிடமாக கொண்ட 2ஆம் லெப்டிணன் ஆடலரசன் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சுதர்சன் அவர்களின் சகோதரி திருமதி கார்த்திகா சிவரூபன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் துயிலுமில்ல பாடல் காணொளியில் காண்பிக்கப்பட்டது.
கவிதை – காற்றோடு கலந்த எம் தியாக வீரர்களை கார்த்திகை மலர் தூவி அஞ்சலி செய்யும் நாள் இன்று, இப் புனித நாளிலே “கார்திகைப் பூவெடுத்து வாருங்கள்” என்னும் தலைப்பிலே கவிதை சொல்ல வருகின்றார் செல்வன் துளசிதன் முரளிதரன்
பாடல் – அகிலமே நடுங்கும் இவர்கள் வீரம்கண்டு அடிமை விலங்கை உடைப்பதற்காய் சாவினைத் தோள்மீது சுமந்த எம் வீரர்களை போற்றிப் பாட வருகின்றார் செல்வி திருத்திகா சுகர்ணன்.
கவிதை – மங்காப் புகழ்கொண்ட மாண்பு மிகுவீரர்கள் மண்ணுக்காய் தம் உயிரை அற்பணித்த “மாவீரர்களே” என்ற தலைப்பில் கவிதை சொல்ல வருகிறார் செல்வன் அவினாஷ் ராஜதுரை
பாடல் – உயிர்நீத்து எம் தேசத்திற்காக தம்மை ஆகுதியாக்கியவர்கள். தமிழீழத்தின் கனவோடு பயணித்த வேளை காற்றோடு கலந்தனர். இதனை வெளிப்படுத்துமுகமாக தீயினில் எரியாத தீபங்களே – நம் தேசத்தில் உருவான ராகங்களே என்னும் பாடல் மூலமாக பாட வருகின்றார் செல்வன் கரிஷகர் ஜெயமனோகர்.
நடனம் – மல்லரி நடனத்தை வழங்க வருகிறார்கள் செல்வி ஆரகி நகுலேஸ்வரன் மற்றும் செல்வி துவேரித்தா சிவச்செல்வன்.
பாடல் – எம்மண்ணின் பூர்விக இனம் தமிழர் இதனை எத்தனையோ ஆய்வுகள் உறுதிப்படுத்தினாலும் நமக்கென்றோர் சுதந்திரம் இல்லாமலே நாம் வாழ்கின்றோம். அதனை விளக்கும் பாடலைப் பாட வருகிறார் செல்வி தமிழ்த்தேன் சுதன்.
நடனம் – “என்னோடு ஆடடா” என்னும் தனமான உணர்வினை வெளிப்படுத்தும் சிறப்பான நடனத்தினை ஆட வருகின்றனர்.
செல்வி பபிக்சனா வேலுப்பிள்ளை
செல்வி சாம்பவி சிவானந்தன்
செல்வி சரந்தகி பரமேஸ்வரன்
செல்வி பிரணவி யோகநாதன்
செல்வி தேனுயா நிமல்ரஞ்சன்
செல்வி பிரவீனா பிரபாகரன்
செல்வி சிந்துயா முருகதாசன்
செல்வி சந்தோஷி செந்தமிழ்ச்செல்வன்
செல்வி அரிஷா சுகுமாரன்
செல்வி சுருதி ஜீவதாசன்
அதன் பிற்பாடு பாடசாலை கீதமும் பின்பு கொடி கையேந்தல் நிகழ்வும் இடம்பெற்று நினைவு கூரல் நிறைவு பெற்றது.
[embedyt] https://www.youtube.com/watch?v=XLPRhZc5WU8[/embedyt]
[embedyt] https://www.youtube.com/watch?v=UsJCs4seAVQ[/embedyt]
[embedyt] https://www.youtube.com/watch?v=RdURmWeaffw[/embedyt]
[embedyt] https://www.youtube.com/watch?v=4wqmYUlDSN8[/embedyt]
[embedyt] https://www.youtube.com/watch?v=K1NNMdwmuJc[/embedyt]
[embedyt] https://www.youtube.com/watch?v=k5TeI-Clc3A[/embedyt]
[embedyt] https://www.youtube.com/watch?v=jUqjn0LKCwM[/embedyt]