https://www.facebook.com/media/set/?set=a.1305841186187515.1073741846.264369427001368&type=1&l=ef5e600252
தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைத்தார். அதன்பின்பு அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மாவீரர் நினைவு கூரலில் ஈகைச்சுடரினை மண்மீட்புப் போரினில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை பிறப்பிடமாக கொண்ட 2ஆம் லெப்டிணன் ஆடலரசன் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சுதர்சன் அவர்களின் சகோதரி திருமதி கார்த்திகா சிவரூபன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் துயிலுமில்ல பாடல் காணொளியில் காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் தொகுப்புகள் காணொளியில் காண்பிக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கார்த்திகை பூவினை கல்லறைக்கு காணிக்கையாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து கவிதை, பேச்சு, நடனம் மற்றும் நாடகம் போன்ற மாவிரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எமது பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. சிதைக்கப்பட்ட கல்லறைகள் சித்திரமாய்ச் சிறப்பெடுக்கும்! விதைக்கப்பட்ட கருவறைகள் புத்துயிராய்ப் பிறப்பெடுக்கும்! புதைக்கப்பட்ட உணர்வலைகள் அணைதாண்டிப் பெருக்கெடுக்கும்! தமிழனாய் மீண்டும் தலை நிமிர்வோம்! தன்மானத்தோடு மீண்டும் உயிர்பெறுவோம்!!