தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 2025

இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் இனிதே நடைபெற்றது.