தைத்திருநாளும் தமிழ்ப் புத்தாண்டும்

தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப் பெரும் விழாவான இந்தப் பொங்கல் விழா சமயம் கடந்தது. பிற இந்து சமய விழாக்கள் போல நட்சத்திரத்தின் அடிப்படையிலோ, பஞ்சாங்க அடிப்படையிலோ, இஸ்லாமியப் பண்டிகைகள் போல பிறை பார்த்தோ வருவதல்ல. தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னனியில் எந்தப் புராணக் கதையும் இல்லை. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் கதிரவனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

உழவர் திருநாள்
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.



எங்களது பாடசாலையில் சனிக்கிழமை பதின்நான்காம் திகதி தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வும் பாடசாலையில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பெரியோர் முதல் சிறுவர் வரை கடும் குளிரினையும் பொருட்படுத்தாது வெளியில் நின்று பானையில் பால் பொங்கி வழிய பொங்கலோ பொங்கல் என்று உரத்த குரலில் கத்தி சந்தோசம் அடைந்தனர்.
அதன் பின்பு மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன, எல்லா காலை நிகழ்வுகளும் முடிந்த பின்பு பொங்கலுடன் பலவகையான உணவுகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிமாறப்பட்டன

[embedyt] http://www.youtube.com/watch?v=-BRr8WC–Jc[/embedyt]

[embedyt] http://www.youtube.com/watch?v=rasnkGl1JbQ[/embedyt]

[embedyt] http://www.youtube.com/watch?v=FwTBeFv4gIY[/embedyt]

[embedyt] http://www.youtube.com/watch?v=MEnNK0ADkEM[/embedyt]

[embedyt] http://www.youtube.com/watch?v=x5Qks7JQxWI[/embedyt]
 

Full pictures: https://www.facebook.com/media/set/?set=a.1025031607601809.1073741843.264369427001368&type=1&l=7996d6acd4