தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளையால் நடாத்தப்பட்ட 8 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா 19-02-2023, ஞாயிற்றுக்கிழமையன்று கரோ லெசர் சென்ரர் பைரன் மண்டபத்தில், வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழா காலை 9:30 மணிக்கு அகவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. இவ்விழாவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட கிட்டத்தட்ட 10,000 இற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்பட்ட அதிதிறன் பெற்ற மாணவர்களின் கௌரவிப்பில் எங்கள் மாணவர்களும் கலந்து கேடயங்களை பெற்றுக் கொண்டார்கள்.