இன்று எங்களது பாடசாலையில் இடம்பெற்ற ஆரோக்கியமாக நிகழ்வில் 20க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் மருத்துவர்களை சந்தித்து உதவிகள் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் Kent Police சுய பாதுகாப்புக்கள், வீட்டு பாதுகாப்பு, பொருட்கள் மற்றும் அனைத்துவிதமான விளக்கங்களை மாணவர்களுக்கும் அங்கு நின்றோர்களுக்கும் வழங்கினார்கள்.
ஆண்டுதோறும் நடுப்பகுதியில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையிலான அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத்தேர்வு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடத்தப்படுகின்றது. பொதுத் தேர்வின் மாதிரி வினாத்தாளாகவே இத்தேர்வு அமைந்திருக்கும்.
மாணவர்களை அனைத்துலகப் பொதுத்தேர்வுக்கு அணியஞ்செய்யும் நோக்கில் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இத்தேர்வுக்கான விடைகள் அனைத்தும் கல்விக்கழகங்களுக்கு கல்விமேம்பாட்டுப் பேரவையினால் அனுப்பிவைக்கப்படும். மாணவர்களின் இடர்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கு இத்தேர்வு பயனுள்ளதாக அமைகின்றது.