டார்ட் போர்ட் தமிழ் அறிவியற் கழகதில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 21.11.2015 அன்று காலை 11.15மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வன் கிரிஷாந்த் நகுலதாஸ் ஏற்றிவைத்தார். அதன்பின்பு அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடரினை வீரவேங்கை சாந்தன் அவர்களின் தங்கை திருமதி சுகுமாரன் ஏற்றிவைக்க மாவீரர் துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட்டது.
எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சகோதரர் அல்லது உறவினர்களில் எமது மண்ணுக்காக தம் உயிரை மாய்த்தவர்களின் பெற்றோர்களும் இச்சுடரை ஏற்றினார்கள். அடுத்து மாவிரரர் தொடர்பான தலைமை உரையினை எமது பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி சசிகரன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து மாவீரர் தொடர்பான நிகழ்ச்சிகளான கவிதை, பேச்சு, நடனம் மற்றும் நாடகம் போன்ற மாவிரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எமது பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக விழ விழ எழுவோம் என்ற எழுச்சி பாடலுக்கு நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் தட்டி எழுப்பினார்கள் வளர்தமிழ் 4 மாணவர்கள்.