The first Maaveerar Naal was held on 27 November 1989. The date was chosen as it was the anniversary of the first LTTE cadre to die in combat, Lt. Shankar (Sathiyanathan alias Suresh), who died on 27 November 1982.
முதலில் பிரித்தானியக் கொடியினை வளர்தமிழ் 10 கல்வி பயிலும் மாணவி செல்வி பிரகல்யா பிரபாகரன் ஏற்றிவைக்க செல்வி சயானி சசிகரன் அவர்கள் எடுத்துக் கொடுத்தார். அடுத்ததாக தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலைப் பொறுப்பாளர் திரு சஞ்ஜீவன் ஆறுமுகம் அவர்கள் ஏற்றிவைக்க செல்வன் அக்சன் சிவோதயன் அவர்கள் எடுத்துக் கொடுத்தார்.
அடுத்ததாக எம் தேச விடுதலைக்காக எம் மண்ணிலே வித்தாகிய எம் வீர மறவர்களைப் போற்றுதற்குரிய நாளான மாவீரர் நாளான மாவீரர் நாள் பற்றிய வரலாற்றுக் கருத்துக்களை “தாய் மண்ணுக்காக உயிர் நீத்த நம் தேசப் புதல்வர்கள்” என்னும் தலைப்பில் செல்வி சாம்பவி குமரனின் பேச்சு இடம்பெற்றது.
அடுத்த நிகழ்வாக உலகிலேயே வீரம் மிக்க இனம் தமிழினம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமது வீரத்தினை நிரூபித்தவர்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய வீரத்தை இன்று வரை நிரூபித்துக் காட்டியவர்கள். அவ்வாறான வீரத்தினை மாவீரர் புகழ் பாடுவோம் பாடல் மூலம் பாடினார்கள் செல்வி லதுஜா சிறிவிந்தன், செல்வன் விஸ்ணு ஜெயானந்த், செல்வன் விஸ்வா ஜெயானந்த், செல்வி தனிகா நிமல் ரஞ்சன், செல்வி கீர்த்தனா நிர்மலன், செல்வி கர்சனா சிவகுமரன், செல்வன் கரின் கிரிதரன், செல்வி அஸ்விகா சதீஸ்குமார்.
அடுத்து தமிழீழ தேசத்தை மீட்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து தாய் மண்ணை மட்டுமே நேசித்துக் கொண்டு தலைவன் வழி சென்று விடுதலைப் போரிலே வித்தாகி வீழ்ந்த மாவீரர்களின் தியாகத்தைக் கூறும் கவிதை செல்வன் சந்தோஷ் ஜெயசேகரனால் வழங்கப்பட்டது.
அடுத்து பொங்கிய தமிழ் இனமாக நாம் உலகம் எங்கும் வியாபித்துள்ளோம். எமது இன விடுதலைக்கான அடித்தளம் எம்மை அடையாளப்படுத்தம் மொழி. அம் மொழியின் வரலாற்றையும் பெருமையையும் உலகறியச் செய்ய வேண்டும் அதனை உணர்த்தும் வகையில் பொங்கு தமிழாக பொங்கி நிற்கிறோம் என்னும் பாடலுக்கு செல்வி திருத்திகா சுகர்னன், செல்வி அட்சஜா வாகீசன், செல்வி அகழ்யா கவிராஜ், செல்வி கனிஸ்கா தயாளன், செல்வி சஜீதா திருநாவக்கரசு, செல்வி சைந்தவி குமரன், செல்வி பபிஷா கனகராசா, செல்வி மாயா கேதரிநாத், செல்வி ஆரதி கஜேந்திரன், செல்வி யதுஸ்கா பரணிதரன் நடனமாடினார்கள்.
எமது முன்னோர்களின் நாடகப் பாங்கோடு ஒத்த வகையில் தாளத்திற்குச் சுருதி தப்பாது தாளத்தோடு கதை சொல்வார்கள். அடடா ! “மாவீரர்களின் மகத்துவத்தையும் மாவீரர் நாளின் முக்கியத்துவத்தினையும்” தமக்கே உரிய பாணியில் தாளலயத்துடனும் சிறிய நடிப்போடும் செல்வன் அஜிதன் அன்புக்கரசன் (அப்பாவாக), செல்வி சரண்தகி பரமேஸ்வரன் (அம்மாவாக), செல்வி தமிழ்த்தேன் சுதர்சன் (மகளாக), செல்வன் அவினாஸ் ராஜதுரை (மகனாக), செல்வன் ஜெயராம் ஜெயச்சந்திரன் (தபால்காரன்), செல்வன் திருசோன் தேவராஜ் (மாமாவாக) மிகச் சிறப்பாக நடித்துக் காட்டினார்கள்.
இறுதியாக எமது பாரம் பரியத்தின் தொன்மை மிக்கது பறை, அந்நாளில் இருந்து இன்று வரை பறை முக்கிய இடம் வகிக்கிறது. தமிழின் வீரத்தைப் பறைசாற்றி நிற்பது இப்பறையே அத்தகைய சிறப்பு மிக்க பறையினைப் பாடுபொருளாகக் கொண்டு “எடுத்து அடிடா முப்பாட்டன் பறையை ” என்னும் பாடல் மூலம் எழுச்சியும் உணர்வும் மிக்க நடனத்தை செல்வன் கிருஷாந்த் கிருஷ்ணவரன், செல்வன் சகீரன் சசிகரன், செல்வி அபிசனா அன்புக்கரசன், செல்வன் அதிசன் சிவோதயன் , செல்வன் அக்சன் தங்கராசா, செல்வன் நிக்சன் தங்கராசா கொடுத்தார்கள்.